பெரியார் உலகின் ஓர் அங்கமாகி மகிழுங்கள்!: ‘பெரியார் உலகம்’ உருவாக தாராளமாக நன்கொடை வழங்கும்படி
கேட்டுக்கொள்கிறோம். கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திடவும் சிறந்த
முறையில் திட்டத்தை நிறைவேற்றவும் உங்கள் நன்கொடை உதவும்.
உலகளாவிய இயக்கத்துடன் இணையுங்கள்:‘பெரியார் உலகம்’ வெறும் சாதாரண சுற்றுலாத் தலமல்ல. மனிதநேயக்
கொள்கை ஒளியைப் பரவிப் படரச் செய்யப்போகும் கலங்கரை விளக்கமாக அது
இருக்கப்போகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்று முழங்கியபடி அனைத்துத் தரப்பு
மக்களையும் பெரியார் உலகம் ஒன்றிணைக்கும்.
எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள்:சமூக மாற்றங்களுக்கும், அறிவுத் தேடலுக்கும் புதிய அணுகுமுறைகளுக்கும்
வழிவகுக்கும் பணியில் உள்ள எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள்.
மாற்றங்கள் ஏற்பட உதவுங்கள்: சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் மலர்ந்து செழித்திட எங்களுக்கு
உதவுங்கள். எங்கள் நிகழ்வுகளுக்கும், செயல்களுக்கும் ஆதரவளித்து எங்களுடன்
இணைந்து பயணியுங்கள்.
பரப்புரையில் ஈடுபட்டு உதவுங்கள்: தந்தை பெரியாரின் கொள்கைகள் பரவிப்படர பரப்புரையில் ஈடுபட்டு
ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் நோக்கம் குறித்து தங்கள்
நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் விளக்கிக் கூறுங்கள். சமூக
வலைத்தளங்கள் வாயிலாக பரப்புரை செய்தும் உதவுங்கள்.